இன்று அதிகாலை நமீதா திருமணம்: திருப்பதியில் சிறப்பாக நடந்தது

நடிகை நமீதா-வீரேந்திர செளத்ரி திருமணம் இன்று காலை திருப்பதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. திரையுலகினர் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நமீதா. இவரது ’மச்சான்’ என்ற அன்பு வார்த்தையால், ஏராளமான ரசிகர்கள் வாய்க்கப் பெற்றார். உடல் எடை கூடி, பட வாய்ப்புகள் குறைந்தது.

பின்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முயற்சித்தார். ஆனால் பெரிய அளவில் புகழையோ, வாய்ப்புகளையோ ஏற்படுத்தி தரவில்லை.

இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதையடுத்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் வீரேந்திர சௌத்ரியை, நமீதா திருமணம் செய்து கொண்டார். இன்று காலை 5.30 மணியளவில் நடைபெற்ற திருமண நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *