shadow

இன்னும் 10 வருடங்களுக்கு ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்: பிரபல விஞ்ஞானி தகவல்

21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர் மற்றும் ரோபோட் மயமாகி வரும் நிலையில் விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோட்டுக்கள் வகுப்பறையில் பாடம் எடுக்கும் என பிரபல விஞ்ஞானி அந்தோணி ஷெல்டன் அவர்கள் கூறியுள்ளார்.

ஒவ்வொரு வகுப்புக்கும் உரிய மாணவர்களுக்கு தேவையான டேட்டாக்களுடன் கூடிய ரோபோட்டுக்கள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இன்னும் பத்து வருடங்களில் ஆசிரியர்கள் கொஞ்ச கொஞ்சமாக குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்தோணி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகை ரோபோட்டுக்கள் மாணவர்களின் முகக்குறிப்பை அறிந்து செயல்படும் என்றும், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை உள்வாங்கி பதிலளிக்கும் திறமைகள் இந்த ரோபோட்டுக்களுக்கு இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply