இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது இந்தியா: கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம்

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் நேற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வோக்ஸ் 137 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து 289 பின் தங்கியிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது

ஆட்டநாயகனாக வோக்ஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மீதமிருக்கையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *