இனி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.7க்கு கிடைக்கும்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ஒரு லிட்டர் தனியார் வாட்டர் பாட்டில்கள் ரூபாய் 20க்கும் தமிழக அரசின் அம்மா வாட்டர் பாட்டில் ரூபாய் 10க்கும் விற்பனையாகி வரும் நிலையில் கேரளாவில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் இனி 7 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்

கேரளாவில் தற்போது வாட்டர் பாட்டில் தற்போது ரூபாய் 20 என்ற அதிகபட்ச விலையில் இருந்தாலும் கேரள அரசு தற்போது ரூபாய் 13 ரூபாய்க்கு வாட்டர் பாட்டிலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 6 ரூபாய் மேலும் குறைத்து இனிமேல் வாட்டர் பாட்டிலின் விலை ரூ.7 என விற்பனை செய்யப்படும் என்றும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன் என்பவர் தெரிவித்துள்ளார்

மேலும் தரம் குறைவான குடிதண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் 7 ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் என்பது கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது

Leave a Reply