shadow

இந்த புது கெட்டப் எதற்கு தெரியுமா? சஸ்பென்ஸ் வைக்கும் சிம்பு

சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும், டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள்.

சமூகவலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்!

இவ்வாறு சிம்பு தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply