இந்த ஆப்ஸ் எல்லாம் உங்கள் மொபைலில் இருக்கின்றதா?

பத்தே நாளில் பணக்காரர் ஆவது எப்படி?’, ‘ஆயிரம் நாள்களில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படி?’ என்கிற மாதிரியான சுயமுன்னேற்ற புத்தகங்களை எல்லாம் படித்து ஊக்கம் பெற்றதெல்லாம் பழங்கதை. இந்த டிஜிட்டல் யுகத்தில், சுந்தர் பிச்சையில் இருந்து மார்க் சக்கர்பெர்க் வரை எல்லா சி.இ.ஓ-க்களும் யூடியூபிலேயே சக்சஸ் சீக்ரட்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆயில் பெயின்டிங் முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு வரை அனைத்துக்கும் மொபைல் ஆப்பிலேயே வகுப்புகள் நடக்கின்றன; பயிற்சிகள் தரப்படுகின்றன. அப்படி உங்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் மாற்ற உதவும் இரண்டு ஆப்ஸ் இங்கே…

டெட் (TED)

எந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் தேடினாலும் பலநூறு வீடியோக்களைக் கொண்டுவந்தும் கொட்டும் யூடியூப் போலவே, வெற்றியாளர்களின் சாதனைக் கதைகளை விவரிக்கும் வீடியோ ஆப்தான் இந்த டெட். யூடியூபில் கிடைக்கும் பல லட்சம் வீடியோக்கள் அனைத்தும் இந்த ஆப்பில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கூகுள் அக்கவுன்ட் போல, இதிலும் ஒரு கணக்குத் துவங்கிவிட்டால் ஒரு மினி யூடியூப் போல மொபைல், கணினி என இரண்டிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், பிசினஸ்மேன்கள் என உலகின் பல்வேறு மனிதர்களின் சூப்பர் ஐடியாக்கள், வெற்றிக் கதைகள் அனைத்தையும் ஒரே ஆப்பில் பார்க்க முடிவதுதான் இதன் ஸ்பெஷல். ஒவ்வொரு வீடியோவிலும் ஏதேனும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஒளிந்திருக்கிறது. மேலும், ஆடியோ வடிவிலும் நிகழ்ச்சிகள் கேட்கக் கிடைக்கின்றன.

பிடித்த வீடியோக்களை ப்ளே லிஸ்ட்டில் சேர்க்க, இணையம் இல்லாதபோதும் பார்க்க ஆஃப்லைன் ஆப்ஷன், நம்முடைய நேரத்துக்கேற்ப வீடியோக்களைத் தேர்வு செய்து பார்க்கும் வசதி, வீடியோ சப்டைட்டில்ஸ் என முழுமையான வீடியோ ஆப்பாகவும், தகவல் களஞ்சியமாகவும் இருக்கிறது டெட்.

முன்னேறத் துடிக்கிறவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஆப் இது என்பதை இதில் சில வீடியோக்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.

டவுன்லோடு செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.ted.android&hl=en

பைஜூஸ் (BYJU’S)

போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள நிறைய ஆப்கள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. திறனறித் தேர்வுக்கானப் பயிற்சிகள், முந்தையத் தேர்வுகளின் வினாத் தாள்கள், மின்நூல்கள், தேர்வுக்கான வழிகாட்டல்கள், தினசரி செய்திகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள பல ஆப்கள் இருக்கின்றன. நமக்கான தேவையைப் பொறுத்து அவற்றை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அப்படி ஆன்லைனில் பயிற்சி தரும் ஒரு பல்கலைக்கழகம் தான் இந்த பைஜூ. இந்த நிறுவனத்தின் ஆப்தான் இந்த பைஜூஸ்.

இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு, நமது விவரங்களைப் பதிவு செய்துவிட்டால் போதும், பாடம் கற்றுக்கொடுக்க பைஜூ ஆப் தயார். ஆறாம் வகுப்புப் பாடத்திலிருந்து ஐ.ஏ.எஸ் தேர்வு வரைக்கும் வழிகாட்டுவதற்கான வீடியோக்கள் இதில் கிடைக்கின்றன. பள்ளிப் பாடங்களை அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம் எளிமையாக உருவாக்கி யுள்ளனர். எனவே, படித்துப் பார்த்த பின்னும் புரியாத பாடங்களை வீடியோவாகப் பார்த்து எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இலவசமாகவே நிறைய வீடியோக்கள் மற்றும் மாதிரித் தேர்வுகள் மூலம் பயிற்சி பெற முடிகிறது. இதற்கு மேலும் உங்களுக்குப் பயிற்சி வேண்டுமெனில், பணம் செலுத்த சொல்கிறது ஆப். பள்ளி மாணவர்கள் முதல் போட்டித் தேர்வு எழுதுபவர்கள் வரை அனைவருக்குமான பாடங்கள் தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

டவுன்லோடு செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.byjus.thelearningapp&hl=en

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *