இந்தி மொழிக்கு ஆதரவாக திடீரென கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர்

கிட்டத்தட்ட தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்தி மொழியை எதிர்த்து வரும் நிலையில் இந்திக்கு ஆதரவாக யாராவது கருத்து கூறினால் உடனே அவரை தேசத்துரோகியாக பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இந்தி மொழி அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை, மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறு இல்லை என்றும் மக்களுக்கு பயன்படுகிறதா? என்று பார்க்காமல் இதை வைத்து அரசியல் அரசியல் செய்கின்றனர் என்றும் கூறிய ஞானவேல்ராஜா, பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம், ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரச்சாரம் ஒரு கும்பலால் தவறாக பரப்பப்படுகிறது என்றும் கூறியுளார்.

மேலும் 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply