shadow

இந்திய பெண் யானைக்கு கின்னஸ் அந்தஸ்து கிடைக்குமா?

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 100 வயதாகும் வட்சலா எனும் பெயரிடப்பட்ட பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக யானைகளின் சராசரி ஆயுட்காலம் 85 முதல் 90 ஆண்டுகள் ஆகும், ஆனால் வட்சலா 100 வயதுடன் வாழ்ந்து வருவதால் பூமியில் வாழ்ந்து வரும் யானைகளிலேயே மிகவும் வயதான யானை என வட்சலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என சரணாலய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், யானையின் உண்மையான வயதை கண்டறிய உரிய ஆவணங்கள் தேவை என்பதால், வட்சலா பிறந்த இடமான கேரளவில் உள்ள நீலாம்பூர் வன சரகத்தில் அதற்குறிய ஆவணங்களை கோரியுள்ளனர்.

நீலாம்பூர் வன சரகத்தில் இருந்து ஹோசாங்காபாத் சராணாலயத்திற்கு கடந்த 1972-ம் ஆண்டு மாற்றப்பட்ட வட்சலா, பன்னா புலிகள் சரணாலயத்திற்கு கடந்த 1992-ம் ஆண்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் , வட்சலாவை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் எஸ்.கே.குப்தா கூறுகையில், கடந்த 2003 மற்றும் 2008 ஆண்டுகளில் வட்சலா இருவேறு யானைகளால் தாக்கப்பட்டதால், அதன் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது, இருப்பினும் தகுந்த சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரது கவனத்தையும் வட்சலா ஈர்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply