shadow

இந்திய அரசியல்வாதியிடம் லஞ்சம் வாங்கினாரா ஹிலாரி? டொனால்ட் டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு

hilariஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

தற்போது இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து ஹிலாரி கிளிண்டன் பணம் பெற்றதாக டிரம்ப் அதிரடி குற்றம் சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஹிலாரி வாக்களிக்க, ஹிலாரி கிளிண்டனின் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு இந்திய தொழில் அதிபர்கள் நன்கொடை வழங்கியதாகவும், இந்திய அரசியல்வாதி அமர் சிங் பத்து லட்சம் டாலர்கள் முதல் 50 லட்சம் டாலர்கள் வரை கிளிண்டன் குடும்ப அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டிஊள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஹிலாரி கிளிண்டன் என்ன மறுப்பு தரவுள்ளார் என்பதை அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவின் எதிர்நோக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply