shadow

இந்திய அணியின் வெற்றியும் காங்கிரஸ் வெற்றியும்: ப.சிதம்பரம்

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்து ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றி குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியதாவது, ‘கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தால் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளிலும் வெல்லும் என்பதே ப.சிதம்பரம் அவர்களின் டுவீட் கூறும் உண்மை ஆகும்

 

Leave a Reply