இந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ஆரம்பமாகிறது.

இன்றைய முதல் போட்டி கெளஹாத்தியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் கோஹ்லி, ரோஹித் சர்மா, சாஹல், தவான், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பாண்டே, ராகுல், ராயுடு மற்றும் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹோல்டர், அலன், அம்ரீஸ், பிஷூ, ஹேம்ரஜ், ஹெட்மியர், ஹோப், ஜோசப், நர்ஸ், பால், பவல், ரோச், சாமுவேல் மற்றும் தாமஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *