shadow

இந்தியாவை அடுத்து மலேசியாவிலும் ஆதார் கார்டு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அடுமட்டுமின்றி ஆதார் அட்டை, அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இந்தியாவை அடுத்து மலேசியாவிலும் ஆதார் அட்டை அந்நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மலேசியாவில் தேசிய அடையாள அட்டை மைகாட் என்ற இருந்தாலும் கூடுதலாக ஆதார் அட்டை வழங்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தகவல்களை பெற சமீபத்தில் மலேசிய குழுவினர் இந்தியா வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், குலசேகரன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மலேசியாவிலும் ஆதார் போன்ற அட்டையை வழங்க ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் மானியங்கள் உரிய நபர்களை சென்றடைவதை உறுதி செய்ய முடியும். மலேசிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply