இந்தியாவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் அறிமுகம்

இந்தியாவில் ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. புதிய அம்சம் கொண்டு பல்வேறு ட்விட்களை ஒரு ஸ்லைடுஷோ போன்று உருவாக்க முடியும்.

அந்த வகையில் ட்விட்டர் பயன்படுத்துவோர் தங்களது ட்விட் மற்றும் அவர்களை பின்தொடர்வோரின் ட்விட், டிரென்டிங் ஹேஷ்டேக் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து தனி ஸ்டோரி போன்று பதிவிடலாம். மேலும் மொமன்ட்ஸ்களை ட்விட் செய்யும் போது தனி நபர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும்.

முன்னதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய மொமன்ட்களை பார்க்கும் வசதி மட்டும் வழங்கப்பட்ட நிலையில், பயனர்கள் தங்களது மொமன்ட்களை உருவாக்க முடியும். ட்விட்டர் அல்லது ட்விட்டர் லைட் செயலியில் உள்ள எக்ஸ்ப்ளோர் டேப் கிளிக் செய்து மொமன்ட்ஸ் உருவாக்க முடியும்.

அமெரிக்காவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொமன்ட்ஸ் அம்சத்தில் பல்வேறு பிரிவுகளில் புதிய தகவல்களை பார்க்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தினசரி நடவடிக்கைகளை மொமன்ட் வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

முன்னதாக ட்விட்டர் த்ரெட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. த்ரெட்ஸ் (threads) என அழைக்கப்படும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக ட்விட்டர் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் மூலம் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய த்ரெட்ஸ் அம்சம் மூலம் வழக்கத்தை விட இருமடங்கு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய முடியும்.

ட்விட்ஸ்டார்ம் என்ற அம்சம் நீணட காலமாக சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அந்த வகையில் ட்விட்டர் இணை நிறுவனர் மார்க் ஆண்டர்சன் அவ்வப்போது நீண்ட ட்விட்களை பதிவிடுவார். பின் இந்த அம்சத்திற்கான தேவை பயனர்களிடையே அதிகரித்த நிலையில் ட்விட்டரில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த 140 வார்த்தைகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *