இந்தியாவில் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை அடுத்து நேற்று வெளியாகியுள்ள ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல் போன்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி அம்சம் உள்ள இந்த ஐபோன் மாடல்கள் இந்தியாவில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் ஷோரூம்களில் கிடைக்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் ஐபோன் 8 மாடலின் விலை ரூ.64000 என்றும், ஐபோன் பிளஸ் மாடலின் விலை ரூ.73000 என்றும் தெரியவந்துள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் வெளிவரவுள்ள ஐபோன் எக்ஸ் மாடல் விலை ரூ.89000 (64GB) மற்றும் ரூ.1,02,000(256 GB) என்றும் கூறப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *