shadow

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் எப்போது?

வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் எலெக்ட்ரிக் வேரியன்ட் 2019ம் ஆண்டின் இறுதியில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹைப்ரிட் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் தற்போதைய விலை ரூ.1.25 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வோல்வோ நிறுவனம் எக்ஸ்.சி.90 கார் மாடலை 2017ம் ஆண்டு முதல் தயாரித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து எஸ்90 மாடலை பெங்களூருவில் உள்ள ஆலையில் தயாரித்தது. செப்டம்பர் மாதத்தில் எக்ஸ்.சி.60 மாடல் அதிகம் விற்பனையாவதாக தெரிவித்தது.

போல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.

எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடலில் 2.0-லிட்டர், டைரக்ட் இன்ஜெக்ஷன், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹெச்.பி. பவர், 240என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடல் 398 பி.ஹெச்.பி. பவர், 640 என்.எம். டார்கியூ வழங்கும்.

இந்த என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், காரின் பின்புற சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டாரும், முன்பக்க சக்கரங்களுக்கு பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் கடக்கும் என தெரிகிறது.

Leave a Reply