இந்தியன் வங்கியில் கிளார்க் மற்றும் அதிகாரி வேலை வேண்டுமா?

இந்தியன் வங்கியின் சென்னை கிளையில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையிலானது.

பணி: Officer JMG Scale-I
வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

பணி: Clerks
வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டுத் துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
1. கூடைப்பந்து – 06
2. கிரிக்கெட் – 07
3. கைப்பந்து – 05
4. ஹாக்கி – 03

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன், மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளில் குறிப்பிட்ட சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களை Assistant General Manager (HRM), HRM Department, Corporate Office, Indian Bank, 254260 Avvai Shanmugham Salai, Chennai, Tamil Nadu 600014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 03.03.2018 தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://indianbank.in/pdfs/Detail_Advertisment-Recruitment_of_Sportspersons.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *