இதை செய்திருந்தால், பிகில் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி லாபம் கிடைத்திருக்கும்!

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அந்த படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதால் அந்த படம் லாபகரமான படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் லாபத்தின் சதவிகிதம் மிகவும் குறைவு

ரூ.180 கோடி முதலீடு செய்த ஒரு நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 50 கோடியாவது லாபம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் இந்த படத்தின் லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணம் அதன் அதிகப்படியான பட்ஜெட்டே என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன,.

பிகில் படத்தின் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மட்டுமே சுமார் 90 கோடிக்கும் மேல். இதில் விஜய்யின் சம்பளம் ரூ.50 கோடியை கழித்துவிட்டால் மீதி 40 கோடி என்பது ரொம்ப அதிகம். விஜய் என்ற மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் பெரிய நடிகர், நடிகைகள் தேவையே இல்லை. வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளே போதும். உதாரணமாக நயன்தாரா, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைத்திருந்தால், பட்ஜெட் குறைந்தது ரூ.40 கோடி குறைந்திருக்கும்.

அதேபோல் படப்பிடிப்பை சரியாக திட்டமிட்டு, நாட்களை வீணாக்காமல், தேவையான காட்சிகளை முதலிலேயே முடிவு செய்து படத்தை உருவாக்கியிருந்தால் அதில் ஒரு ரூ.40 கோடி மிஞ்சியிருக்கும். எனவே இந்த படத்தை அதிகபட்சமாக ரூ.100 கோடி செலவு செய்து உருவாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.100 கோடி லாபம் கிடைத்திருக்கும். ஒரு சவாலுக்கு அட்லி எடுத்த இதே கதையை இந்த படத்தில் இருப்பது போல் அப்படியே மீண்டும் லோகேஷ் கனகராஜை வைத்து இயக்கினால் அவர் இந்த படத்தை ரூ.80 கோடியில் இருந்து ரூ.100 கோடிக்குள் முடித்துவிடுவார் என்பதுதான் உண்மை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன,

ஒரு இயக்குனர் மாஸ் இயக்குனர் என பெயரெடுப்பது முக்கியமல்ல, தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்த இயக்குனர் என்று பெயர் எடுப்பதுதான் அவருக்கும் அவருடைய துறைக்கும் ஆரோக்கியமானது

Leave a Reply