இதே கூட்டணி தொடரும்: முன்னாள் முதல்வர் உறுதி

சமீபத்தில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது:- தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நான் கூறினேன். அதே போல் ஜமகண்டி தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நான் சொன்னேன். ஏறக்குறைய அதே போல் எங்கள் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களின் மனநிலையை நான் சரியாக கணித்துள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் மனநிலை பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) புனிதமற்ற கூட்டணியை அமைத்துக்கொண்டதாக பா.ஜனதா தொடர்ந்து கூறியது. காங்கிரஸ் எம்.எல்.சி.யின் மகனை பா.ஜனதாவுக்கு அழைத்து சென்றது புனிதமானதா?. பா.ஜனதாவுக்கு கொள்கை கிடையாது. ஆட்சி அதிகாரத்திற்காக அந்த கட்சியினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *