இதுவரை பார்க்காத விஜய்யை பார்ப்பீர்கள்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யின் கெட்டப்பை இதுவரை பார்க்காத அளவில் செய்யவிருப்பதாகவும், ரசிகர்கள் இதுவரை பார்க்காத விஜய்யை பார்ப்பார்கள் என்றும் தெரிவித்தார்

அதுமட்டுமன்றி இதுவரை பார்க்காத விஜய் படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் இது ஒரு நார்மலான படமாக இல்லாமல் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *