shadow

‘இதுதான் நம்ம சர்கார்’: ‘சர்கார்’ டீசர் விமர்சனம்

தளபதி விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் டீசரை இன்று காலை முதல் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஒரு சரியான விருந்து சற்றுமுன் கிடைத்துள்ளது.

ஆம், சர்கார் படத்தின் அட்டகாசமான டீசர் இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டது. வெளிநாட்டில் இருந்து ஸ்டைலாக வந்திறங்கும் விஜய் நான் ஓட்டு போட இந்தியாவுக்கு வந்திருக்கின்றேன், எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்கவில்லை’ என்பதுடன் டீசர் ஆரம்பமாகின்றது.

ஆனால் விஜய்யின் ஓட்டை இன்னொருத்தர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டதாக அறிந்தவுடன், ‘இன்னும் ஒரு நாளில் என்னென்ன மாற போகுதுன்னு ஓரமா நின்னு வேடிக்கை பார்றா, ஐ எம் அ கார்ப்பரேட் கிரிமினல் என்ற வசனம் பேசும் விஜய்யின் அதிரடி ஆரம்பமாகிறது.

ஐ எம் அ கார்ப்பரேட் கிரிமினல் மற்றும் ‘இதுதான் நம்ம சர்கார்’ போன்ற வசனங்களின்போது விஜய் பட்டையை கிளப்புகிறார். கீர்த்திசுரேஷின் நளினம், வரலட்சுமியின் வில்லத்தனம், ராதாரவி, பழ கருப்பையாவின் கொடூர பார்வை ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கின்றது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான பின்னணி இசையும் பாடலும் டீசரை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. மொத்தத்தில் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் வரை இந்த டீசர் விஜய் ரசிகர்களுக்கு போதுமானது என்றே தெரிகிறது

Leave a Reply