இதுதான் உண்மையான ‘பிகில்’ வெற்றி: வைரலாகும் வீடியோ

விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றியா ? தோல்வியா? என்று ஒருபுறம் பட்டிமன்றம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தின் உண்மையான வெற்றி இதுதான் என விஜய் ரசிகர்கள் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்,.

இந்த வீடியோவில் ஆசிட் வீசியதால் முகம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், ‘ஒரு பெண் மீது ஆசிட் வீசிய நீயே தைரியமாக முகத்தை காண்பிக்கும்போது, நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? என்று கூறுகிறார்.

இதேபோன்ற ஒரு காட்சி பிகில் திரைப்படத்தில் உண்டு என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். ஆசிட் வீசப்பட்டதால் முகம் சிதைந்து போனவர்களுக்கு இந்த படம் கொடுக்கும் ஊக்க டானிக் இந்த வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படம் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுவதே உண்மையான வெற்றி என்றால் பிகில் படமும் உண்மையான வெற்றியை பெற்றுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *