இதுதான் அஜித் பைக் ஆக்சிடெண்ட் ஆன வீடியோவா? அதிர்ச்சி தகவல்

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர் பைக் சேசிங் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளான செய்தி வெளிவந்தது

இதனையடுத்து அஜித் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வு எடுத்து வருவதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் டுவிட்டர் தளத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாக இருக்கிறது. இந்த வீடியோவில் அஜித் பைக் ஓட்டி வருவது போன்றும் திடீரென ஒரு பள்ளத்தில் விழுவதும் போன்ற காட்சியும் உள்ளது. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது அஜித் அல்ல என்றும் வேறொருவர் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இந்த வீடியோவில் இருப்பவர் அஜித் தானா அல்லது வேறு நபரா? என்பதை படக்குழுவினர் விளக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply