இதுகூட தெரியாதா ஸ்டாலின்? பாஜக ஆவேச பதிலடி

சுஜித்தின் மறைவால் தமிழகமே துயரக்கடலில் மூழ்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து நடுக்காட்டுப்பட்டியில் கருத்து கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை. பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளது என்று கூறினார்.

முக ஸ்டாலின் அவர்களின் இந்த கருத்துக்கு தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இதை நீங்கள் சொல்லவில்லை என்றால் நீங்கள் திமுக தலைவரே இல்லை ஸ்டாலின் அவர்களே! மரணத்திலும் விஷம் கக்கும் உங்களிடம் தமிழக மக்கள் கற்றுக்கொள்ள நல்ல விஷயங்களே இல்லை. NDRFல் BSF, CRPF, CISF படையினரும் அடங்கி உள்ளனர் என்ற கூற்றுகூட தெரியாத ஒருவர் தான் ஆட்சியை பிடிக்க கனவு காண்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *