shadow

இணையத்தில் வைரலாகும் ‘தூக்கு துரை’: ஏன் தெரியுமா?

அஜித் குறித்த ஒரு சிறு தகவல் என்றாலே உடனே இணையத்தில் வைரலாகி டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிடும் நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கேரக்டர் ‘தூக்கு’ துரை என்று படக்குழுவினர்களுக்கு நெருக்கமான ஒருவர் இணையத்தில் இந்த தகவலை கசியவிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதால் எந்த அஜித்துக்கு இந்த பெயர் என்று தெரியவில்லை

வீரம் படத்தில் ‘விநாயகம்’, வேதாளம் படத்தில் ‘கணேஷ் மற்றும் விவேகம் படத்தில் ஏகே ஆகிய கேரக்டர்களை தொடர்ந்து ‘விஸ்வாசம் ‘ படத்தில் ‘தூக்கு துரை’ என்ற கேரக்டர்டில் அஜித் நடித்து வருகிறார்.

Leave a Reply