shadow

இணையத்தளங்களில் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

இணையத்தளங்களில் வீடியோ மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொழுதுபோக்கு முதல் எவ்வித தகவலும் வீடியோ வடிவில் இணையத்தளங்களில் நமக்கு மிக எளிமையாக கிடைக்கிறது. யூடியூப் துவங்கி பல்வேறு இணையத்தளங்களிலும் எண்ணிலடங்கா வீடியோக்கள் நம்மை மகிழ்வித்து வருகின்றன. எனினும் இவை அனைத்தும் நமக்கு இலவசமாகவோ அல்லது டவுன்லோடு செய்யும் வசதியை கொண்டிருப்பதில்லை.

நம் நாட்டில் கிடைக்கும் இண்டர்நெட் வேகத்தை கொண்டு நம்மை மகிழ்விக்கும் வீடியோக்கள் அனைத்தையும் எந்நேரமும் ஸ்டிரீம் செய்து பார்க்க முடியாது. அந்த வகையில் இணையத்தளங்களில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் டவுன்லோடு செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

* முதலில் உங்களது கணினியில் ஜெடவுன்லோடர் 2 இணையத்தளம் சென்று JDownloader 2-ஐ டவுன்லோடு செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

* கணினியில் ஜெடவுன்லோடர் 2 செயலியை இன்ஸ்டால் செய்ததும் அதனை இயக்க வேண்டும்.

* இனி நீங்கள் டவுன்லோடு செய்ய வேண்டிய இணையத்தளம் சென்று வீடியோவினை கிளிக் செய்ய வேண்டும்.

* அடுத்து வீடியோவின் இணைய முகவரி (URL) காப்பி செய்து ஜெடவுன்லோடர் 2 செயலியில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

* வீடியோ முகவரியை பேஸ்ட் செய்ததும் வீடியோவினை தாணாக டிடெக்ட் செய்து, டவுன்லோடு செய்ய துவங்கி விடும்.

Leave a Reply