shadow

இணையதளத்தில் வைரலாகும் நமீதாவின் திருமண அழைப்பிதழ்

நடிகை நமீதா சமீபத்தில் தனது அறிவிப்பை வெளியிட்டார் என்பது அறிந்ததே. நடிகரும், தயாரிப்பாளருமான வீரா என்பவரை தான் காதலித்து வருவதாகவும், நவம்பர் 24ஆம் தேதி திருமணம் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது திருமண தேதியுடன் திருமணம் நடைபெறும் இடம், அதற்கு முன்னர் திருமண வரவேற்பு நடைபெறும் இடம் மற்றும் தேதி ஆகிய தகவல்களுடன் திருமண அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

இதன்படி திருப்பதியில் உள்ள சிந்தூர் பார்க் ஓட்டலில் நவம்பர் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு திருமண வரவேற்பும், நவம்பர் 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் காலை 5.30 மணிக்கு திருமணமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply