இணையதளத்தில் பதிவு செய்தால் பாடநூல்கள் வீடு தேடி வரும்
Daft Planners Build Library On A Beach
பள்ளிப் பாட நூல்களை இணையதளத்தில் பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பும் வசதியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்துள்ளது.

 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பாட நூல்களை பள்ளிகளே மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. இதுதவிர, www.textbookcorp.in என்ற இணையதளத்தில் பதிவும் செய்யலாம்.

இதுதவிர, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் தேவைப்படும் பாட நூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அடுத்த 48 மணி நேரத்துக்குள் பணம் செலுத்தியவரின் வீட்டு முகவரிக்கு கூரியர் சேவை மூலம் பாட நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

  இ-சேவை மைய முகவரி விவரங்களும் பாட நூல் நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *