இடது கையில் எலும்பு முறிவு: வலது கைக்கு கட்டுப்போட்ட மருத்துவர்

பீகாரில் சிறுவன் ஒருவனுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவரது தாய் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவர்கள் கைஎலும்பு முறிந்த இடது கைக்கு பதில் வலது கைக்கு கட்டுப்போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பீகாரில் நேற்று ஃபைசான் என்ற சிறுவனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் பீகாரில் உள்ள தர்பங்கா மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவனுக்கு இடது கையில் எலும்பு முறிந்துள்ளதை கண்டுபிடித்து பின்னர் இன்னொரு பிரிவுக்கு கட்டுப்போட அனுப்பியுள்ளனர்.

கட்டுப்போடும் பிரிவினர் அந்த சிறுவனின் வலது கைக்கு கட்டுப்போட்டு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply