இஞ்சி இடுப்பழகை பெற 200 அறுவை சிகிச்சைகள் செய்த இளம்பெண்

வடக்கு கரோலினாவை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் மற்றும் அழகு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தனது உடலை சுமார் 200 முறை அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இதற்காக இவர் செலவு செய்த தொகை சுமார் ரூ.4 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு முறை மார்பகங்களிலும், மூக்கு, காது, வாய், என உடம்பின் பல பாகங்களில் இவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் கண்ணின் நிறத்தை மாற்றவும் கூட ஒருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இத்தனை அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒருவழியாக இவர் நினைத்ததை சாதித்துவிட்டார். இப்பொழுது இவரது இடுப்பை இவரது இரண்டு கைகளால் பிடித்துவிடலாம் அந்த அளவுக்கு மெல்லிடை ஆகிவிட்டது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *