இசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது ‘மாமனிதன்’ மற்றும் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் இன்னொரு படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரோஹ்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டுடன் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இசை மேதை கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு மூணாறு, கொடைக்கானல், ஊட்டி உள்பட ஒருசில இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரை இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *