இங்கிலாந்தில் எனது பெயரில் சொத்துக்கள் இல்லை: விஜய் மல்லையா

vijay mallaiahஇங்கிலாந்து நாட்டில் விஜய் மல்லையாவுக்கு உரிம்கையான சொத்துக்களை பறிமுதல் செய்ய சமீபத்தில் இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் எனக்கு அதிக சொத்துகள் இல்லை என்றும் எனது குடும்பத்தினர் பெயரிலேயே சொத்துகள் உள்ளன என்றும், விஜய் மல்லையா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் தங்கியிருக்கும் வீடு எனது குழந்தைகளுக்கும், லண்டனில் உள்ள ஒரு வீடு எனது தாய்க்கும் சொந்தமானவை. அவற்றை யாரும் தொட முடியாது. ஒருசில கார்கள், சிறிதளவு நகைகள் மட்டுமே எனக்கு சொந்தமாக உள்ளன.

அவற்றை பறிமுதல் செய்வதற்காக நீங்கள் எனது வீட்டுக்கு வர வேண்டாம். நானே நேரடியாக அவற்றை ஒப்படைக்கலாம். அதற்கான நேரமும், இடமும் சொன்னால் போதும்.

இங்குள்ள சொத்துகள் தொடர்பாக லண்டன் கோர்ட்டில் நான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளேன். அவற்றில் கூறியுள்ளதுபோல எனது பெயரில் உள்ள சொத்துகளை எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உண்டு. அதைத் தாண்டி அவர்களால் ஒரு அடியும் முன்னே செல்ல முடியாது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *