இன்று தீர்ப்பு

கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வழக்கு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு கடன் தவணை நீட்டிப்பு ஆறுமாதம் வழங்கப்பட்டது. இந்த கால நீட்டிப்பு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது கடன் தவணை நீட்டிப்பு காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் வரியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த நிலை வட்டி தள்ளுபடி ம்ற்றும் வட்டிக்கு மேல் வட்டி ஆகியன குறித்த வழக்கு இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply