ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 172/3

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று முதல் 2வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் அடித்துள்ளது. விராத் கோஹ்லி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்னதாக ராகுல் 2 ரன்களிலும், முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும் புஜாரே 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *