ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? சம்பளம் ரூ. 50 ஆயிரம்

தமிழக அரசு நடத்தும் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில், காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 16.07.2018 தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த  லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

வேலை இடங்கள்:

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் – 152,
திருவண்ணாமலை – 35,
நீலகிரி – 35,
ஈரோடு – 9,
சேலம் – 11,
தஞ்சாவூர் – 33

வயது வரம்பு: 1-1-18ன் தேதியின்படி 18-30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசின் விதிப்படி வயது வரம்பு தளர்த்திக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.15,700 – 50,000

கல்வித் தகுதி: +2 அல்லது ITI முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-07-2018

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *