shadow

ஆளுனருக்கு அதிகாரம் அதிகமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்தே கவர்னர் செயல்பட வேண்டும் என்றும் ஆளுனருக்கு என தனியாக அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த் வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:

மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்

Leave a Reply