ஆலயங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணமில்லாத மலர்களை சமர்ப்பிக்கக் கூடாது. வேறு காரியங்களுக்கு வாங்கியப் பொருட்களை அர்ப்பணிக்கக் கூடாது.

பரம்பொருளின் பெரும் புகழைத் தவிர வேறு ஏதும் பேசக் கூடாது. அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களை கீழே சிந்தி விடக் கூடாது. கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் கூடாது. இறை சிந்தனையோடு இருக்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக படியைத் தொட்டு வணங்கி வழிபட்டு விட்டு நந்தியிடம் ஒப்புதல் கேட்டு விநாயகரை வணங்கி, பிறகு அறுபத்து மூவர் அல்லது நால்வர் வழிபாடு செய்து அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும்.

நிறைவாக சண்டிகேஸ்வரரிடம் சொல்லிக் கொண்டு வரவேண்டும். அவர் தான் ஆலய தரிசனம் செய்ததை பதிவு செய்து கொள்பவர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *