shadow

தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரியில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் அந்த ஆலங்கட்டியில் ஒன்று பெண் ஒருவர் மீது விழுந்ததால் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது சாந்தி என்பவர் நேற்று இரவு 9 மணிக்கு தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த நிலையில் சாந்தி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது ஒரு பெரிய ஆலங்கட்டி விழுந்தது இதனால் தோள்பட்டையில் எலும்பு முறிந்தது

இதனையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. சாந்தி மீது விழுந்த ஆலங்கட்டி 15 கிலோவுக்கு மேல் இருக்கும் என்றும், அதனால்தான் அவரது தோள் எலும்பு முறிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *