ஆரவ் படத்தின் நாயகி ஆகிறார் ஓவியா?

பிக்பாஸ் ஆரவ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆரவ் நடிப்பில் விஜய்ஸ்ரீ இயக்கும் படத்தில் ஓவியா நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை விஜய்ஸ்ரீ மறுக்கவில்லை என்பதால் இந்த செய்தி உறுதியானதாக கருதப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது உண்மையிலேயே காதலித்த ஆரவ், ஓவியா, இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான காதல் ஜோடியாக நடிக்கவுள்ளார்களாம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *