ஆம், பாஜக மதவாத கட்சிதான்: இல.கணேசன் பெருமிதம்

பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி தான் என்பதில் பெருமை கொள்வதாக பாஜக தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இல.கணேசன், ‘ஒரு முஸ்லீம் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. பாஜகவும் குரல் கொடுக்கும். ஒரு கிறிஸ்துவ சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. பாஜகவும் குரல் கொடுக்கும்.

ஆனால் ஒரு இந்து சமுதாயத்திற்கு பிரச்சனை என்றால் ஒரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காது. நாங்கள் குரல் கொடுக்கின்றோம். அதற்காக எங்களை மதவாத கட்சி என்றால், ஆமாம், நாங்கள் மதவாத கட்சிதான் என்பதை பெருமையாக ஏற்று கொள்கிறோம்’ என்று இல கணேசன் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *