Chennai Today News

ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன தப்பு? டிரம்ப் கேள்வி

ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன தப்பு? டிரம்ப் கேள்வி

ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்தது தவறு அல்ல என்றும், அது ஒன்றும் தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறுவதாகாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுத்து தேர்தல் விதிமுறைகளை டிரம்ப் மீறியுள்ளார் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது ஆபாச நடிகைகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கருத்து கூறிய அதிபர் ட்ரம்ப், முறைகேடு புகார்களில் தண்டனையில் இருந்து தப்புவதற்காக கோஹென் இதுபோன்ற கதைகளை கூறி வருகிறார்.

நடிகைகளுக்கு பணம் கொடுத்தது தமது தனிப்பட்ட விவகாரம். இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!