ஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்

சேலத்தை சேர்ந்த 28 குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் வீடியோக்களை தமிழக பெண்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர். இவர்களில் ஒருசிலர் எல்லை மீறி லைக்குகளுக்காக சில கவர்ச்சிகரமான வீடியோக்களையும் பதிவு செய்கின்றனர்.

இந்த நிலையில் இந்த கவர்ச்சிகரமான வீடியோக்களை சில சமூக விரோதிகள் டவுன்லோடு செய்து ஆபாச இணையதளத்தில் பணத்திர்காக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோக்களை தற்செயலாக பார்த்த சம்பந்தப்பட்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சேலத்தில் மட்டும் 28 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாகவும் புகார் கொடுத்தவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

டிக்டாக் செயலியை ஆக்கபூர்வமாக மட்டும் பயன்படுத்தினால் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வராது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *