ஆபத்து, ஆபத்து.. எந்த செயலியையும் நம்ப வேண்டாம்

கூகுள் பிளே ஸ்டோரில் கோடிக்கணக்கான செயலிகள் கொட்டிக்கிடக்கின்றன என்பதற்காக தேவையான செயலிகளையும் தேவையற்ற செயலிகளையும் நாம் டவுன்லோடு செய்து வைத்து கொள்கிறோம். ஆனால் அந்த செயலிகள் நமக்கு உதவி செய்வதை விட நம்முடைய தனிப்பட்ட தகவல்களை திருடுவதிலேயே குறியாக உள்ளன.

எனவே இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறும் அறிவுரை என்னவெனில் எந்த செயலியையும் 100% நம்ப வேண்டாம். ஒரு செயலியின் பயன் முடிந்தவுடன் உடனே அன் – இன்ஸ்டால் செய்துவிடுங்கள். மீண்டும் தேவைப்படும்போது அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இவ்வாறு இருந்தால் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து கொள்ளலாம் என கூறுகின்றனர். ஒரே நிமிடத்தில் மீண்டும் டவுன்லோடு செய்யும் வசதி இருக்கும்போது அன் – இன்ஸ்டால் செய்ய தயங்கவேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

குறைந்தபட்சம் எப்போதாவது பயன்படுத்தும் செயலிகளையாவது இதுபோன்று செய்தால் பாதுகாப்பு நன்றாக இருக்கும் என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது

Leave a Reply