ஆபத்தில் முடிந்த அகலக்கால். மதுரை 6 பேர் தற்கொலை சம்பவம் தரும் பாடம்

மதுரை யாகவா நகரில் கடந்த ஞாயிறு அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி செய்த திடுக்கிடும் சம்பவத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் மரணம் அடைந்தனர். இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த குடும்பம் இந்த விபரீத முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த குடும்பத்தின் மூத்தவர் ஜெயஜோதி என்ற பெண் தான். இவர் தனது இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

ஜெயஜோதி பெயரில் நர்சரி பள்ளி, கவரிங் கடை, ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, ரியல் எஸ்டேட் என பல பிசினஸ் உண்டு. ஏலச்சீட்டு, மற்றும் தீபாவளி சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் பிசினஸிற்காக ஏராளமான இடங்களை வாங்கிக்குவித்தனர் ஜெயஜோதி குடும்பத்தினர். ஆனால் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் வாங்கி போட்ட இடங்கள் விற்பனை ஆகாததால் தீபாவளி சீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே 18 வருடம் கட்டிக்காத்த நல்ல பெயர் கெட்டுவிடும் என்ற காரணத்தால் இந்த குடும்பத்தினர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சீட்டு போட்டு ஏமாந்தவர்களுக்கு ஜெயஜோதியின் சொத்துக்களை விற்று உரிய தொகையை மாவட்ட நிர்வாகம் தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *