ஆந்திராவில் சந்தித்த 151ம் – 151ம்

ஆந்திர மாநில முதலமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டியை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என இரு தரப்பிலும் கூறப்படுகிறது

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. அதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இதுவரை 151 படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை வைத்து இன்று 151ம், 151ம் சந்தித்து கொண்டனர் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *