shadow

ஆணுக்கும் வேண்டாம், பெண்ணுக்கும் வேண்டாம், சபரிமலை புலிகளுகே! சூழியல் ஆர்வலர் அச்சுதன்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்களும், குறிப்பிட்ட வயது பெண்களும் மட்டுமே செல்லவேண்டும் என்ற நிலை கடந்த பல ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சபரிமலைக்கு ஆணும் செல்லக்கூடாது, பெண்ணும் செல்லக்கூடாது. அது புலிகளுக்கான இடம். அங்குப் புலிகளை வாழவிடுங்கள் என்று சூழியல் ஆர்வலர் ஏ.அச்சுதன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஏ.அச்சுதன் பேசியதாவது: சபரிமலைக்கு ஆண்களும் செல்லக்கூடாது, பெண்களும் செல்லக்கூடாது. சபரிமலை என்பது புலிகள் வாழுமிடம். அதைப் புலிகளுக்காக விட்டுவிடுங்கள்.

சபரிமலை குறித்த ஆய்வில் பங்கேற்றிருந்தேன். ஆய்வு குறித்த அறிக்கையையும் நாங்கள் அரசிடம் அளித்திருக்கிறோம். சபரிமலையில் இன்னும் அதிகமான அளவுக்கு வளர்ச்சிப்பணிகளை செயற்கையாக மேற்கொண்டால், பாறைகளையும், மரங்களையும் அகற்ற வேண்டியது இருக்கும். இது இயற்கையை நாம் தொந்தரவு செய்வதுபோன்றதாக அமையும். இதனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய நிலச்சரிவைச் சந்தித்து, ஒட்டுமொத்தமாக சபரிமலையை நாம் இழக்க வேண்டியதுவரும் என்று எச்சரித்துள்ளோம். ஆனால், யாரும் செவிமெடுக்கவில்லை.

இவ்வாறு அச்சுதன் தெரிவித்தார்.

 

Leave a Reply