ஆணின் பின்புறமாக சென்ற ஸ்க்ரூடிரைவர்: மரணத்தின் விளிம்புவரை சென்று பிழைத்த அதிசயம்

அமெரிக்காவில் புளொரிடோ மாகாணத்தில் 46 வயது ஆணின் பின்புறத்தில் 8 இன்ச் நீளமுள்ள ஸ்க்ரூடிரைவர் உள்ளே சென்றுவிட்டதை அடுத்து மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவரை மருத்துவர்கள் போராடி காப்பாற்றியுள்ளார்.

இந்த நபர் குறித்த எந்த விபரமும் தெரியாத நிலையில் மயங்கிய நிலையில் இருந்த இவரை ஒருசிலர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவரது பின்புறத்தில் இருந்து ரத்தம் கசிந்து வந்ததால் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு முழு 8 இன்ச் ஸ்க்ரூடிரைவர் உள்ளே இருந்தது. இதனையடுத்து உடனடியாக சர்ஜரி செய்து அந்த ஸ்க்ரூ டிரைவரை மருத்துவர்கள் வெளியே எடுத்து அந்த நபரை காப்பாற்றினர். இன்னும் மயக்கத்தில் இருக்கும் அவர் எழுந்த பின்னர்தான் அவர் யார்? என்பது தெரிய வரும்

Leave a Reply