ஆணவத்தை கேட்கும் வபெருமானின் வடிவங்களில் ஒன்றான பிட்சாடனர்

சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று பிட்சாடனர். இவர் பிச்சை பெறும் தோற்றத்தில் இருக்கும் வடிவம் இதுவாகும். உலகிற்கே படியளக்கும் அவரே ஏன் பிச்சை கேட்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது உணவோ, பொருளோ அல்ல. ‘நான்’ என்ற 1எண்ணத்தை உண்டாக்கும் ஆணவத்தை நம்மிடமிருந்து பெற்று, நம்மைச் சுத்தப்படுத்தவே திருவோடு தாங்கி வருகிறார். ஆனால், ஆணவ எண்ணம் படைத்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களால் பிட்சாடனருக்கு ஏதும் கொடுக்க முடியவில்லை.

முற்றும் துறந்த முனிவர்களோ தங்கள் ஆணவத்தை கபாலத்தில் இட்டு, அவர் அருளைப் பெற்றனர். சிவாலயங்களில் பிட்சாடனரைத் தரிசிக்க நேர்ந்தால், அவரவர் ஆணவத்தை பிச்சையாக அளியுங்கள். மதுரை மீனாட்சியம்மன் கோவில், சுந்தரேஸ்வரர் பிரகாரத்தில் பிட்சாடனருக்கு பிரமாண்ட சிலை இருக்கிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *