‘ஆடை’ ரிலீஸில் திடீ சிக்கல்: காரணம் என்ன?

அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படம் இன்று வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இன்று காலை காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது

ஆடை படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணமாக இன்றைய காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் மதிய காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது

ஆனால் சற்று முன் வந்த தகவலின்படி இன்றைய மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆடை படம் திரையிட திட்டமிட்டு இருந்த திரையரங்குகளில் கடாரம் கொண்டான் திரைப்படம் திரையிடப்படுவதாகவும் ஆடை திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது

இதனால் அமலாபாலின் ஆடை படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

Leave a Reply