ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முன்னர் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டதால் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளது இத்தனை வருடங்கள் காத்திருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தியாக உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *