shadow

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: தென்கொரிய வீராங்கனை வீழ்த்தி மேரிகோம் சாம்பியன்

வியட்நாமில் கடந்த சில நாட்களாக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் போட்டி நடந்து வந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மேரிகோம், தென்கொரியாவின் கிம் ஹையங் மி என்பவரை வீழ்த்தி தங்கம் வென்றார். தங்கம் வென்ற மேரிகோமுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் காலிறுதியில் சீனாவின் தைபேவின் சாய் பிங்கையும், அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபாஸா கொமுராவை வென்ற மேரிகோம் இன்று கிம் ஹயங் மியுடன் மோதியபோது தடுப்பாட்டத்தை கையாண்டார். இதற்கு கைமேல் பலன் கிடைத்ததால் தங்கம் வென்றார்.

இதற்கு முன்னர் மேரிகோம் நான்கு முறை ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கம் வென்றுள்ளதால் இது அவருக்கு ஐந்தாவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply